×

யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்

சென்னை: யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து பாடி நடித்துள்ள ஆல்பம், ‘மணி இன் தி பேங்க்’. இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக சில தனிப்பட்ட கலைஞர்களால் உருவாக்கப்படும் இசை ஆல்பங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடம் மறைந்திருக்கும் இசைத்திறமையை வெளியே கொண்டு வரும் விதத்திலும், அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையிலும் ‘மணி இன்‌ தி பேங்க்’ என்ற ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப்பாடலை யுவன் சங்கர் ராஜாவே ஆர்வத்துடன் எழுதியுள்ளார்.

The post யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yuvan Shankar Raja ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா